கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு

பெங்களூரு: கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது என்று காங். கட்சி உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்கள் ராஜினாமா; கடிதத்தை ஏற்க மறுக்கும் சபாநாயகர் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  நடந்து வருகிறது. கூட்டணி மீது அதிருப்தி அடைந்து 16 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா  செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை, ராஜினாமா செய்த எம்எல்ஏ.க்களின் கடிதத்தை பரிசீலனை  செய்த சபாநாயகர் ரமேஷ் குமார்,  5 பேரின் கடிதத்தை மட்டும் ஏற்றார். மற்றவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்தார். நேரில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதையேற்று எம்எல்ஏ ரோஷன் பெய்க் மட்டும் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.ராஜினாமாவை ஏற்க கோரி எம்எல்ஏ.க்கள் மனு தாக்கல் இதனால் மும்பையில் தங்கியிருந்த எம்எல்ஏ.க்கள் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ்  ஜார்கிஹோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், எஸ்.டி.சோமசேகர்,  சிவராஜ்ஹெப்பார், மகேஷ்குமட்டஹள்ளி, கே.கோபாலையா, எச்.விஸ்வநாத்,  நாராயணகவுடா ஆகியோர், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவில், ‘‘ராஜினாமா செய்துள்ள 10 எம்எல்ஏ.க்களும் இன்று(நேற்று) மாலை 6 மணிக்குள்  சபாநாயகர் முன் ஆஜராகி, தங்களின் ராஜினாமா விருப்பத்தை நேரில் தெரிவிக்க வேண்டும். அதன் மீது சபாநாயகர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’ என்று தெரிவித்தனர். ராஜினாமாவை ஏற்க உத்தரவிட முடியாது.:  சபாநாயகர் புதிய மனு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் உடனடியாக மனுத் தாக்கல்  செய்தார், அதில், ‘எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று உடனடியாக முடிவு  தெரிவிக்கும்படி சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. ராஜினாமா கடிதத்தை பரிசீலிக்க அவகாசம்  தேவைப்படும். எனவே, எனக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மும்பையில் இருந்து நேற்று மாலை விமானத்தில் பெங்களூரு வந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 10 பேரும், விதானசவுதாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபாநாயகர்  ரமேஷ் குமார் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கக் கூடாது; புதிய மனு இந்நிலையில் கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,\'அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஆனால் மக்கள் கருத்தை கேட்காமல் தானாக ராஜினாமா செய்வோர் மனுவை தார்மீக அடிப்படையில் விசாரிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகர் மனுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மனுவும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை