7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தினகரன்  தினகரன்
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை ஆளுநர் பரிசீலனையில் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு கோப்பு அனுப்பி 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என நளினி தொடர்ந்த வழக்கில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தமிழக அரசு வாதம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நளினி மனு விசாரணைக்கு ஏற்றதா? இல்லையா? என்பது பற்றிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை