இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்

தினமலர்  தினமலர்
இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்

அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய், இரண்டாவதாக மருத்துவரை மணமுடித்தார்.

தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் அப்படத்தில் நடித்த நடிகை அமலா பாலை காதலித்து 2014ல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் 2017ல் அமலாபாலை விவாகரத்து செய்தார். நடிகை அமலாபால் மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

இந்நிலையில் விஜய்க்கு அவரது பெற்றோர் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், விஜய்க்கும் நேற்று சென்னையில் எளிமையாக திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். மணமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை