ரீல் - துபாய் பார் டான்சரின் உண்மை கதை

தினமலர்  தினமலர்
ரீல்  துபாய் பார் டான்சரின் உண்மை கதை

ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் படம் ரீல். சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் கதாசிரியர் சுராஜ் பேசியதாவது:

இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினேன். இந்த படத்தை பார்க்கும்போது உங்கள் வாழ்வில் நீங்கள் பார்க்கும் பல கதாபாத்திரங்களை உணர்வீர்கள். என்றார் .

இயக்குனர் முனுசாமி பேசியதாவது: சினிமா எடுப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. நிறைய கம்பெனிகள் ஏறி, இறங்கி பல ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். இது ஒரு உண்மைக்கதை, அதற்கேற்ற வகையில் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார் சந்தோஷ். முழுக்க புதுமுகங்கள் பணிபுரிந்த இந்த படத்துக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் . என்றார்.

மூலக்கதை