அஞ்சலியை காதலிக்கும் யோகிபாபு

தினமலர்  தினமலர்
அஞ்சலியை காதலிக்கும் யோகிபாபு

அஞ்சலி, ஜெய் இணைந்து நடித்த பலூன் படத்தை இயக்கிய கே.எஸ்.சினிஷ், தயாரிப்பாளராகி இருக்கிறார். கிருஷ்ண ஜெயராஜ் இயக்கத்தில் அவர் தயாரிக்கும் படத்தில் யோகிபாபு ஹீரோ, அஞ்சலி ஹீரோயின். விஜய் டி.வி.ராமர் முக்கிய கேரக்டரில நடிக்கிறார். அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படம் குறித்து இயக்குனர் கிருஷ்ண ஜெயராஜ் கூறியதாவது:

யோகி பாபுவும் அவரது நண்பர்களும் ஒரே பெண்ணை, ஒரு தலையாய் காதலிக்கிற மாதிரியான கதை. அந்த பெண் கேரக்டரில் நடிக்க அஞ்சலி தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை சொன்னபோது, கதையை ரசித்தார். இந்த படத்தில் நடிக்கிறேன் என்று திடீர ஒப்புக்கொண்டு எங்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார். முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது என்றார்.

மூலக்கதை