மூழ்கும் கப்பலில் தப்பிய கேப்டன் ராகுல் காந்தி: சிவ்ராஜ் சிங் சவுகான் பேட்டி

தினகரன்  தினகரன்
மூழ்கும் கப்பலில் தப்பிய கேப்டன் ராகுல் காந்தி: சிவ்ராஜ் சிங் சவுகான் பேட்டி

நாக்பூர்: மூத்த பாஜ தலைவரும் முன்னாள் மபி  முதல்வருமான சிவ்ராஜ் சிங் நாக்பூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். ஒரு கப்பல் மூழ்கும்போது அதில் உள்ள கேப்டன் அதை காப்பாற்ற கடைசி வரை முயற்சிப்பார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு கேப்டனே வெளியே குதித்துள்ளார். நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறி விட்டதால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று சுதந்திரம் பெற்ற உடன் மகாத்மா காந்தி கூறினார். காந்திக்கு பிறகு பண்டிட் ஜவஹர்லால் நேருவும் இப்படி கூறியதாக நினைக்கிறேன். இப்போது, உண்மையான காந்தியின் கனவை இந்த போலி காந்தி (ராகுல் காந்தி) நிச்சயமாக நிறைவேற்றி காங்கிரசை ஒழித்துக் கட்டுவார். இவ்வாறு சவுகான் கூறினார்.

மூலக்கதை