சதுரகிரியில் அடிப்படை வசதி கலெக்டர்களுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
சதுரகிரியில் அடிப்படை வசதி கலெக்டர்களுக்கு உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் முத்திருளப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், `மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க  சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமிகோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.   மனுைவ விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர்,  ‘‘சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுப்பது தொடர்பாக மதுரை, விருதுநகர் கலெக்டர்கள், மாவட்ட வன அலுவலர், அறநிலையத்துறையினர் கூட்டத்தை கூட்டி  முடிவெடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை