நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம்: டிஜிபி தகவலால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம்: டிஜிபி தகவலால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள சிறைத்துறை டிஜிபியாக இருப்பவர் ரிஷிராஜ் சிங். அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பிற்கு பெயர்போனவர். இவர் ஒரு மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:காவல்துறையில் பல வழக்குகளில் சாமர்த் தியமாக உதவியர் டாக்டர் உமாதத்தன். சமீபத்தில் நான் ஒரு ஆர்வம் காரணமாக  டாக்டர் உமா தத்தனை தொடர்புக் கொண்டு நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கேட்டன். அப்ேபாது அவர், ஸ்ரீதேவி இறந்தது விபத்தால் அல்ல என்று என்னிடம் கூறினார். எப்படி இதை உறுதியாக கூறுகிறீர்கள் என்று கேட்டேன். ஒருவர் எவ்வளவு மது அருந்தியிருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி இறக்க முடியாது. யாராவது காலை உயர்த்தி பிடித்து தலையை தண்ணீரில் முக்கினால் மட்டுமே இறக்க முடியும் என்று அவர் கூறினார். இவ்வாறு ரிஷிராஜ்சிங் கூறினார்.

மூலக்கதை