தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா?: அரசு விளக்கம்

தினகரன்  தினகரன்
தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா?: அரசு விளக்கம்

புதுடெல்லி: தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 542 தொகுதிகளில் 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது பதிவான 65.95 சதவீத வாக்குகளை விட இது 1.16 சதவீதம் அதிகம். இந்த நிலையில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர், `வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை\' என்றார்.

மூலக்கதை