வரி விவகாரம்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் இன்று டில்லியில் பேச்சுவார்த்தை

தினமலர்  தினமலர்
வரி விவகாரம்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் இன்று டில்லியில் பேச்சுவார்த்தை

புதுடில்லி: இந்திய-அமெரிக்க வர்த்தகம், மற்றும் பொருளாதாரம் குறித்து இரு தரப்பு பிரதிநிதிகள் இன்று டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா, அதிக வரி வசூலிக்கிறது. பரஸ்பரம் சம அளவில் இருக்கும் வகையிலான வரி விதிப்பு அமல்படுத்தப்பட வேண்டும் அல்லது குறைந்தளவு வரி விதிக்க வேண்டும். இல்லாவிடில், இந்தியா போன்ற நாடுகள் விதிக்கும் வரியை போன்று, அந்நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவும் வரிவிதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.


இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் கலந்து கொண்டனர். அப்போது வரி விதிப்பு விவகாரம் குறித்து பேசினர்.இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்க உதவி வர்த்தக பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையிலான குழுவினர், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை இன்று டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலக்கதை