இந்தியா தோல்வி: இருவர் மரணம் | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா தோல்வி: இருவர் மரணம் | ஜூலை 11, 2019

 கோல்கட்டா: இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 50 ரன்கள் எடுத்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார்.

இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கோல்கட்டாவில் இருசக்கர வாகன கடை நடத்தி வரும் ஸ்ரீகன்டா மெய்ட்டி எனும் ரசிகர், தனது அலைபேசியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். தோனி ரன் அவுட் ஆனதும் மெய்ட்டிக்கு மாரடைப்பு ஏற்பட, கீழே சரிந்து விழுந்தார்.

சப்தம் கேட்டு வந்த அருகில் இருந்த கடை உரிமையாளர், மெய்ட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தோனியின் மாநிலமான ஜார்க்கண்ட் மருத்துவமனையில் வேலை பார்த்தவர் அசோக் பஸ்வான் 49. பணி முடிந்து வீட்டுக்கு வந்த இவர் இந்தியா போட்டியை பார்த்தார். இந்திய அணி தோல்வியடைய, பஸ்வான் இதயம் செயலிழந்து மரணம் அடைந்தார். இதனால் இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மூலக்கதை