கிளம்பினார் ‘பிசியோதெரபிஸ்ட்’ | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
கிளம்பினார் ‘பிசியோதெரபிஸ்ட்’ | ஜூலை 11, 2019

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி ‘பிசியோதெரபிஸ்ட்’ பாட்ரிக்கின் பதவிக்காலம் முடிவடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணியின் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக, இந்தியாவின் பாட்ரிக் பர்கத் 2015ல் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் உலக கோப்பை தொடருடன் முடிய இருந்தது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைய, பாட்ரிக் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இவருடன் சேர்ந்து பணியாற்றிய உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசுவின் ஒப்பந்தமும் முடிந்தது. 

இது குறித்து பாட்ரிக் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிதான், இந்திய அணியுடன் விளையாடிய எனது கடைசி போட்டி. கடந்த நான்கு ஆண்டாக வாய்ப்பு தந்த இந்திய கிரிக்கெட் போர்டுக்கு நன்றி. இந்திய அணியின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்,’ என, தெரிவித்துள்ளார். 

இந்திய அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ எங்களுடன் இணைந்து செயல்பட்ட பாட்ரிக், சங்கர் பாசுவுக்கு நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

 

 

மூலக்கதை