160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு வந்த 10 ரயில் பெட்டிகள்

தினகரன்  தினகரன்
160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு வந்த 10 ரயில் பெட்டிகள்

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக டெல்லி ஷாகூர் பஸ்தி பணி மனையில் நிறுத்தப்பட்டிருந்த 10 ரயில் பெட்டிகள் நேற்று முன்தினம் முதல் டெல்லியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுவே மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்பாட்டிற்கு வந்த முதல் முறையாகும். டெல்லியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தும் ரயில்பெட்டிகள் தேவை என்று டெல்லி அரசு ரயில்வேக்கு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து 160 படுக்கைகள் கொண்ட 10 மாற்றியமைக்கப்பட்ட ஏசி இல்லாத ரயில் பெட்டிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏசி வசதி கொண்ட 10 ரயில் பெட்டிகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மூலக்கதை