இளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி

தினகரன்  தினகரன்
இளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி

லண்டன்:  இங்கிலாந்து ராணி எலிசபெத், குதிரை சவாரி செய்து மகிழந்தார். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இங்கிலாந்து ராணி எலிசபெத்(94) மற்றும் அவரது கணவர் பிலீப்(98) ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறி லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டைக்கு சென்றனர். கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணி தனது கணவருடன் அங்கேயே தங்கி உள்ளார். இந்நிலையில், ராணி எலிசபெத் நேற்று முன்தினம் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராணி எலிசபெத் தனது 68 ஆண்டு கால ஆட்சியில் இந்த கோட்டையில் இருந்து தான் தொலைக்காட்சியில் உரையாற்றுவது உள்ளிட்ட அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குதிரையேற்றம் என்பது இடுப்பு எலும்பை பதம் பார்க்கும் ஒரு விஷயம். அதன் மீது சவாரி செய்வதற்கு திறமையும், பயிற்சியும் தேவை. ஆனால், ராணி சிறு வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக் கொண்டவர் என்பதால், குதிரையேற்றம் அவருக்கு கஷ்டமானதாக இல்லை. ஆனால், இந்த வயதில் அவர் அதை செய்ததுதான் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை