கொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா : வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க திட்டம்

தினகரன்  தினகரன்
கொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா : வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க திட்டம்

மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் ஜூன் 11ம் தேதி மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்க உள்ளனர். கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இங்கு தற்போது கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிவிட்டது. 4,855 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும் போது ரஷ்யாவில் சற்று குறைவாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதி உதவியுடன் கெம்ரார் என்ற மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்ற ஆன்டிவைரல் மருந்தினை தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூன் 11 முதல் நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்கப்படும் என ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணம் பெறவும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.1990ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரவிர் என்னும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அவிஃபேவிர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், இதுகுறித்த விவரங்களை இருவாரங்களில் வெளியிட உள்ளதாகவும் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை