பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,964 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,964 பேருக்கு கொரோனா

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருதால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,964 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய் அறிகுறியுடையவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்வது தொடர்பாகவும் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு கட்டங்களாக நடடிக்கை எடுத்து வருகிறார். ஆயினும் நோய் தீவிரமடைந்து கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 2,964 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,460 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புகளில் சிக்கி புதிதாக 60 பேர் பலியாகினர்.


இதையொட்டி, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,083 பேர் கொரோனா சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 14,398 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை பாக்.,கில் 5,61,136 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். பாக்.,கின் மொத்த பாதிப்புகளில் பஞ்சாப்பில் 26,240 பேர், சிந்துவில் 28,245 பேர், கைபர் பக்துன்க்வாவில் 10,027 பேர், பலுசிஸ்தானில் 4,393 பேர்,இஸ்லாமாபாத்தில் 2,589 பேர், கில்கித் - பல்திஸ்தானில் 711 பேர் மற்றும் பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 255 பேர் என பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை