அவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
அவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்

வாட்டிகன் சிட்டி: பழையபடி எதுவும் திரும்பாது என அவநம்பிக்கையுடன் இருக்காதீர்கள் என போப் பிரான்சிஸ், சிறப்பு பிரார்த்தனையின் போது தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இத்தாலியில் 2.33 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வாடிகன் சிட்டியில் 12 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2 பேர் மீண்டுள்ளனர்.

இந்நிலையில், வாட்டிகன் சிட்டியில், நேற்று நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ் கூறியதாவது: இந்த நெருக்கடியான நேரத்தில், பலரும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். பழையபடி எதுவும் திரும்பாது என, பலரும் எண்ணுகின்றனர். இவ்வாறு நினைப்பது, நம்மை மேலும் பலவீனமாக்கும். ஆகையால், நம்மிடம் இருக்கும் இந்த அவநம்பிக்கையை முதலில் விட்டுவிட வேண்டும். இப்படி நினைப்போருக்கு, எப்பொழுதும் நம்பிக்கை என்பது திரும்பி வரவே வராது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை