ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக இன்று முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தினகரன்  தினகரன்
ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக இன்று முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் 30 சிறப்பு ஏசி ரயில்களுடன், கூடுதலாக 200 பயணிகள் சிறப்பு ரயில்கள் ஜூன் 1 முதல் இயக்கப்படும். ஜூன் ஒன்று முதல் 30 வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்காக இதுவரை 26 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் முதல் நாளில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். டிக்கெட் அல்லது ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையம் மற்றும் ரயிலில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பரிசோதனையில் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில் நிலையம் மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, விமானப் போக்குவரத்து துறை ஹர்தீப் சிங் புரி டிவிட்டர் பதிவில, ‘‘வெளிநாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 2,340 விமானங்களை இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 529 விமானங்கள் மூலம் 45,646 பயணிகள் வந்து சென்றுள்ளனர். மிஷன் வந்தே பாரத்தின் கீழ் இதுவரை 47,000க்கும் மேற்பட்டோர் தாய்நாடு திரும்பியுள்ளனர்’’ என்று கூறியுள்ளனர்.

மூலக்கதை