மதுவுடன் விருந்து; ருமேனியா பிரதமருக்கு அபராதம்

தினமலர்  தினமலர்
மதுவுடன் விருந்து; ருமேனியா பிரதமருக்கு அபராதம்

புக்கரெஸ்ட்: மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்ற ருமேனியா பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில், அந்நாட்டின் பிரதமர், லுடோவிக் ஓர்பன் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், அரசு கட்டடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்றனர். இந்த விருந்தில், பிரதமர் உள்ளிட்டோர் புகைப் பிடிப்பது போன்ற புகைப்படம், அந்நாட்டு பத்திரிகையில் வெளியானது. இதையடுத்து, பிரதமர் லுடோவிக் ஓர்பனுக்கு, 600 டாலர் ( இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை