கொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. பலி எண்ணிக்கையும் 4,700ஐ நெருங்குகிறது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 213 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக நாடுகளில் அதிக உயிர்பலியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில், நேற்று(மே 31) மட்டும், புதிதாக, 9,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு, 4 லட்சத்து 5 ஆயிரத்து 843ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 4,693 பேர் இறந்துள்ளனர்.


'வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் பயப்பட தேவையில்லை' என, ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பலியானோரின் உண்மையான எண்ணிக்கையை ரஷ்ய அரசு மறைப்பதாக, சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

மூலக்கதை