இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 4.5% உயர்வு: மத்திய அரசு

தினமலர்  தினமலர்
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 4.5% உயர்வு: மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் சதவீதம் 4.5 சதவீதம் உயர்வு அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,74,355 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் விகிதம் 4.51 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே, கடந்த 14 நாட்களில் 13.3 சதவீதம் பேரும், கடந்த 3 நாட்களில் 15.4 சதவீதம் பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை