பஞ்சாப், மேற்கு வங்கம், ம.பி.,யில் ஊரடங்கு நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
பஞ்சாப், மேற்கு வங்கம், ம.பி.,யில் ஊரடங்கு நீட்டிப்பு

போபால்: பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை 5வது கட்டமாக ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ம.பி., மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


ம.பி.,யில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஜூன் 30ம் தேதி வரை, மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதே போல், மேற்கு வங்கத்தில் ஜூன் 15ம் தேதி வரை, நிபந்தனைகளுடன் கூடிய கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மூலக்கதை