கொரோனா மாஸ்கில் ஓவியம்; வித்யாசமாக நிதி திரட்டும் சீன ஓவியர்

தினமலர்  தினமலர்
கொரோனா மாஸ்கில் ஓவியம்; வித்யாசமாக நிதி திரட்டும் சீன ஓவியர்

லண்டன்: சீனாவின் பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் கேலிச் சித்திரக் கலைஞர் ஐ வெய்வெய். 62 வயதாகும் ஐ, தற்போது பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் வசித்து வருகிறார். சீன ஜனநாயகவாதிகளை தனது அரசியல் கேலிச் சித்திரங்கள்மூலமாகத் தொடர்ந்து எதிர்த்து வரும் இவர், பல அரசியல் ஊழல்களை கண்டறிந்து மக்களிடையே புரட்சி கலைஞராகப் புகழ்பெற்றவர். சில அரசு விமர்சனங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர், 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இவர் சீனாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல அரசு அனுமதி வழங்கியது.

பின்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சிறிது காலம் வசித்து வந்த இவர், பின்னர் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது ஓவியங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். தற்போது கொரோனா ஊரடங்கில் சீனாவுக்கு நிதி திரட்ட தனது ஓவியங்களை புது விதமாகப் பயன்படுத்தி உள்ளார்.

நான்கு கொரோனா மாஸ்குகளில் தனது நான்குவித ஓவியங்களை வரைந்து விற்பனைக்கு வைத்துள்ளார். இதன்மூலம் வரும் நிதியை சீன அரசு கொரோனாவுக்கு பயன்படுத்திக்கொள்ள அவர் வலியுறுத்தி உள்ளார். இது வைரலாகி உள்ளது. இவரது அரசியல் உட்குறியீடுகள் கொண்ட ஓவியங்களை வாங்க மக்கள் இந்த மிகுந்த ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியங்கள் உள்ள மாஸ்குகளை அணிவதை இவரது ரசிகர்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

மூலக்கதை