சீன ஆதிக்கத்தை இந்தியா கட்டுப்படுத்தும்: அமெரிக்க எம்.பி.,

தினமலர்  தினமலர்
சீன ஆதிக்கத்தை இந்தியா கட்டுப்படுத்தும்: அமெரிக்க எம்.பி.,

வாஷிங்டன்: ''ஆசிய பிராந்தியத்தில் சீனா மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியாவால் சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்'' என அமெரிக்க எம்.பி. ஜான் கார்னின் கூறினார்.

'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் சீனா - அமெரிக்கா இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இந்திய - சீன எல்லையிலும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.


அமெரிக்க குடியரசு கட்சியின் டெக்சாஸ் எம்.பி., ஜான் கார்னின் கூறியதாவது: ஆசிய பிராந்தியத்தில் சீனா மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும்.

'எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்வதே அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்' என பொருளாதார மற்றும் ராணுவ நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் பனிப் போரானது இனி சீனாவுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இந்தியா இயற்கையாகவே நம் நட்பு நாடு. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு இதுவே சரியான நேரம். இவ்வாறு கூறினார்.

மூலக்கதை