ஜி-7 மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா

தினமலர்  தினமலர்
ஜி7 மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா

வாஷிங்டன்: ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது. கொரோனாவால் திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநாட்டை நடத்துவதே சிறந்த முன்னுதாரணம் என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


அதன்படி, வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது இதில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு வாஷிங்டன் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இயலாது என மெர்கல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை