கொரோனா தடுப்பு மருந்து, சிகிச்சை தடையின்றி கிடைக்க 37 நாடுகள், உலக சுகாதார அமைப்பு முயற்சி

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு மருந்து, சிகிச்சை தடையின்றி கிடைக்க 37 நாடுகள், உலக சுகாதார அமைப்பு முயற்சி

ஜெனிவா: உலக நாடுகளை கலக்கம் அடையச் செய்து கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையை உலக அளவில் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் 37 நாடுகளும் உலக சுகாதார அமைப்பும் கூட்டு முயற்சியை துவங்கி உள்ளன.


அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறிய 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் பெரும் பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பு மருந்து கண்டறியப்படும் பட்சத்தில் காப்புரிமை தொடர்பான காரணங்களால் மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என சிறிய மற்றும் வளரும் நாடுகளில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும், 37 வளரும் நாடுகளும் இணைந்து C-TAP என்ற இந்த கூட்டு முயற்சியை தொடங்கி உள்ளன. அரசுகள், நிறுவனங்கள் இதில் இணநை்து செயல்படலாம் என்றும், பொது உரிமை மற்றும் மருந்து குறித்த பொதுவான ஆராய்ச்சியை ஊக்குவிப்பது இதன் நோக்கம் என்றும் உலக சுகாதார நிறுவன தலைவர் பெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை