பாஜக எம்பி பிரக்யா சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
பாஜக எம்பி பிரக்யா சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: பாஜக எம்பி பிரக்யா சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுக்கு பல்வேறு தனியார் அமைப்புகளும் நிவாரணம் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர். மாநிலத்தில் கொரோனா பரவி வரும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் எம்பியை காணவில்லை என மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பல்வேறு பகுதிகளில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பைராகர் சிசிலி பகுதியில் நடமாடும் மருத்துவமனை சேவையை வீடியோ கால் மூலம் துவக்கி வைத்தபோதும், அவரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பேசிய முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பிசி ஷர்மா; எம்.பி தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங் இந்தத் தொற்றுக் காலத்தில் மக்களுடன் நிற்பதாகவும், சாத்வி பிரக்யாவின் இருப்பைக் குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் இருப்பதாகத் கூறியிருந்தார். இந்நிலையில் பிரக்யா சிங் காணாமல் போகவில்லை என்றும், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகி உமாகாந்த் தீட்சித் கூறி உள்ளார். தொலைபேசி மூலம் தொற்று நடவடிக்கைகள் குறித்து பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் இருக்கிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினார்.

மூலக்கதை