இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்

தினமலர்  தினமலர்
இந்தியா  அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்

வாஷிங்டன்: வரும் வாரங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தெரிவித்தார்.

அமெரிக்காவில், நேற்று நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்காவுக்கான இந்திய துாதர், தரண்ஜித் சிங் சந்து, கூறியதாவது:அமெரிக்காவுக்கு, போதிய அளவிலான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளை, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசு அனுப்பிவைத்தது, இருநாடுகளுக்கு இடையிலான உறவில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.


இது, வர்த்தக ஒப்பந்தங்களில், சாதகமான முன்னேற்றத்தை உருவாக்கும் என, நம்புகிறேன். கொரோனா' ஒழிப்பு நடவடிக்கையில், இரு நாட்டு அரசுகளும், கவனம் செலுத்தி வருவதால், வரும் வாரங்களில், சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியா, - அமெரிக்கா இடையே, கையெழுத்தாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை