கொரோனாவால் இறந்வர்கள் சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை: டில்லி அரசு

தினமலர்  தினமலர்
கொரோனாவால் இறந்வர்கள் சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை: டில்லி அரசு

புதுடில்லி: கொரோனாவால் இறந்தோரின் சடலங்களை, விரைந்து தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, டில்லி அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.


டில்லியில், கொரோனா பாதிப்பில் இறந்தோரின் உடல்கள், பல நாட்களாக தகனம் செய்யப்படாமல், பிணவறையில் குவிந்து கிடப்பதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. அரசுக்கு, 'நோட்டீஸ்'டில்லியில், லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் பிணவறையில், 80 சவப் பெட்டிகள் மட்டுமே உள்ளன. அதனால், அங்குள்ள, 108 சடலங்களில், 28 சடலங்கள், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவலத்தை, ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றம், இப்பிரச்னை தொடர்பாக, சுயமாக வழக்குப் பதிவு செய்து, டில்லி அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த வழக்கு, நேற்று, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி அரசு சார்பில், கூடுதல் வழக்கறிஞர், சஞ்சய் கோஸ் ஆஜராகி கூறியதாவது:கொரோனாவால் இறந்தோரின் சடலங்கள், நிகாம்போத் படித்துறை தகன மையத்தில், எரியூட்டப்படுகின்றன. அங்குள்ள, ஆறு எரிவாயு தகன மேடைகளில், இரண்டு மட்டுமே இயங்குகின்றன. இதையடுத்து, பஞ்ச்குயன், பஞ்சாப் பாக் தகன மையங்களிலும், தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தகன மையங்களின் நேரம், தற்போதைய, 7 மணி நேரத்தில் இருந்து, 15 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான சடலங்கள் தகனம் செய்யப்பட்டு விட்டன. நேற்று முன்தினம், 28 சடலங்கள் எரிக்கப்பட்டன. எஞ்சிய, 35 சடலங்கள் இன்று எரியூட்டப்படும். முழு விபரம்பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே, சடலங்களை தகனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும், சடலங்களைப் பெற உறவினர்கள் மறுப்பதாலும், பிணைவறையில் தேக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் தகனம் குறித்த முழு விபரத்தை தெரிவிக்குமாறு, டில்லி அரசு மற்றும் மூன்று மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, ஜூன், 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.ஒரே நாளில் 82 பேர் பலிடில்லியில், நேற்று ஒரே நாளில், கொரோனாவுக்கு, 82 பேர் பலியாகியுள்ளனர். அங்கு, 16 ஆயிரத்து, 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 398 பேர் இறந்துள்ளனர். 7,495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மூலக்கதை