கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் படையெடுத்த வெட்டுகிளிகள் வட மாநிலத்தில் இருந்து வந்தவை இல்லை என அதிகாரிகள் உறுதி

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் படையெடுத்த வெட்டுகிளிகள் வட மாநிலத்தில் இருந்து வந்தவை இல்லை என அதிகாரிகள் உறுதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். வேளாண்மை துறை இணை இயக்குனர் உள்பட அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்நிலையில் கிராமத்தில் உள்ள வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வட மாநிலத்தில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் இல்லை எனவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மூலக்கதை