கொரோனா பாதித்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ஒரு வேளைக்கு 40 சப்பாத்தி வேணும்!.. பீகார் ‘தனிமை’ மையத்தில் சுவாரஸ்யம்

தினகரன்  தினகரன்
கொரோனா பாதித்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ஒரு வேளைக்கு 40 சப்பாத்தி வேணும்!.. பீகார் ‘தனிமை’ மையத்தில் சுவாரஸ்யம்

பாட்னா: கொரோனா பாதித்த புலம்பெயர்ந்த தொழிலாளி தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு வேளைக்கு 40 சப்பாத்தி சாப்பிடுவதால் பீகார் ‘தனிமை’ மைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்திற்கு 23 வயது புலம்ெபயர்ந்த தொழிலாளி அனூப் ஓஜா வந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் மஞ்ச்வாரி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவுகள் பட்டியல் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால் அவருக்கு அவை போதவில்லை. நிறைய சாப்பிட விரும்புகிறார். இல்லாவிட்டால் அதிகாரிகளிடம் தகராறு செய்கிறார். காலை உணவில் 40 சாப்பாத்திகளை உட்கொண்டார். மதிய உணவில் 10 தட்டுகள் அரிசி சாதம் சாப்பிட்டார். குறைந்தது 10 பேருக்கு உணவளிக்க கூடிய உணவை சாப்பிடுகிறார். இட்லி, கோதுமை மாவு தோசை, வறுத்த சுண்டல் போன்றவறையும் விரும்பி சாப்பிடுகிறார். தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் நிர்வாக அதிகாரி, இளைஞனின் அசாதாரண உணவு தேவை குறித்து மேலதிகாரிக்கு புகார் தெரிவித்தார். அவர்களும், ஓஜாவின் அசாதாரண பசிக்கு தேைவயான உணவை இடைவெளிவிட்டு கொடுக்க அறிவுறுத்தினர். ஓஜாவின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைய உள்ள நிலையில், அவர் எப்போது வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று அங்குள்ள அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர். நான்காவது கட்ட ஊரடங்குக்கு பின் பீகார் வந்த அவர் தனிமைப்படுத்த மையத்தில் அடைக்கப்பட்டதால், உடல் அல்லது மன அழுத்தம் காரணமாக உணவை அதிகமாக உட்கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை