விதிமுறை கடைப்பிடிக்காததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன

தினமலர்  தினமலர்
விதிமுறை கடைப்பிடிக்காததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன

தி.நகர் : தி.நகர் ரங்கநாதன் தெருவில், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததால், மாநகராட்சி உத்தரவு படி அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

ஊரடங்கில் சில தளர்வுகள் அரசு அறிவித்ததையடுத்து, சென்னையின் வர்த்தக மையமாக விளங்கிய, தி.நகர், ரங்கநாதன் தெருவில் ஊரடங்கால் மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இங்கு மக்கள் வரத்து அதிகரித்து, ரங்கநாதன் தெரு இயல்பு நிலைக்கு திரும்பிய அதேநேரம், சென்னையில் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதைபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில், பாதிப்பு எண்ணிக்கை, 1,500 கடந்தது.

இந்நிலையில், ரங்கநாதன் தெருவில், கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும், அலட்சியமாக வந்து சென்றனர்.இதனால், மேலும், அதிவேகமாக கொரோனா பரவும் அபாயம் உருவானது.இதையடுத்து, நேற்று போலீசாருடன் ரங்கநாதன் தெருவிற்கு சென்ற, மாநகராட்சி அதிகாரிகள், மறு அறிவிப்பு வரும் வரை கடைகளை மூடும் படி, ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தினர். இதையடுத்து, ரங்கநாதன் தெருவில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

மூலக்கதை