கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி.: ஒடிசாவில் கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி வெறிச்செயல்

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி.: ஒடிசாவில் கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி வெறிச்செயல்

ஒடிசா: கொரோனாவை குணமாக்கவேண்டும் என்று கூறி ஒடிசாவில் கோயில் பூசாரி ஒருவர் பக்தரின் தலையை வெட்டி நரபலி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள கோயில் ஒன்றில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கோயில் பூசாரியாக 72 வயது சன்சரி ஓஜா சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவரிடம் கொரோனா ஒழிய அந்த நபரை பலி கொடுக்கும் படி கடவுள் கட்டளையிட்டதாக கூறியுள்ளார். பக்தர் மறுப்பு தெரிவிக்கவே பூசாரி அவரை பலமாக தாக்கியதுடன் தலையை துண்டித்து சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார். பின்னர் காவல் நிலையம் சென்று சரணடைந்த பூசாரி, கடவுள் கனவில் வந்து கட்டளையிட்டதால் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்ட நகருக்கும் கோயில் பூசாரிக்கு முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை செய்தபோது பூசாரி மதுபோதையில் இருந்ததாகவும், பின்னர் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் பூசாரி மனநலம் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். கொரோனா குறித்து கட்டுக்கடங்காத வதந்திகள் பரவிவரும் நிலையில் கொரோனாவை ஒழிப்பதாக கூறி கோயிலில் வைத்து ஒருவர் தலை வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை