மகாராஷ்டிராவில் பாதிப்பு 60,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்வு; 4706 பேர் பலி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் பாதிப்பு 60,000ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்வு; 4706 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 7466 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 175 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால்  இதுவரை 4706 பேர் உயிரிழந்த நிலையில், 71,106 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,982 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18,616 பேர்    குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது  இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 19,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,548 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 16,281 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. அங்கு, 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7495 பேர் குணமடைந்துள்ளனர்.  மாநில வாரியாக விவரம்:அசாமில் 856 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 104 பேர் குணமடைந்தது.பீகாரில் 3296 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1211 பேர் குணமடைந்தது.சண்டிகரில் 288 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 189 பேர் குணமடைந்தது.சத்தீஸ்கரில் 399 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 83 பேர் குணமடைந்தது.கோவாவில் 69 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.குஜராத்தில் 15,562 பேருக்கு பாதிப்பு; 960 பேர் பலி; 8003 பேர் குணமடைந்தது.அரியானாவில் 1504 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 881 பேர் குணமடைந்தது.திரிபுராவில் 242 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 167 பேர் குணமடைந்தது.கேரளாவில் 1088 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 555 பேர் குணமடைந்தது.ராஜஸ்தானில் 8067 பேருக்கு பாதிப்பு; 180 பேர் பலி; 4817 பேர் குணமடைந்தது.ஜார்கண்டில் 469 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 212 பேர் குணமடைந்தது.லடாக்கில் 73 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.மணிப்பூரில் 55 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 5 பேர் குணமடைந்தது.மேகலாயாவில் 21 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.ஒடிசாவில் 1660 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 887 பேர் குணமடைந்தது.பாணடிச்சேரி 51 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.பாஞ்சாப்பில் 2158 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1946 பேர் குணமடைந்தது.உத்தரகாண்ட்டில் 500 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 79 பேர் குணமடைந்தது.கர்நாடகாவில் 2533 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 834 பேர் குணமடைந்தது.ஜம்மு காஷ்மீரில் 2036 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 859 பேர் குணமடைந்தது.தெலுங்கானாவில் 2256 பேருக்கு பாதிப்பு; 67 பேர் பலி; 1345 பேர் குணமடைந்தது.மேற்கு வங்கத்தில் 4536 பேருக்கு பாதிப்பு; 295 பேர் பலி; 1668 பேர் குணமடைந்தது.உத்தரப்பிரதேசத்தில் 7170 பேருக்கு பாதிப்பு; 197 பேர் பலி; 4215 பேர் குணமடைந்தது.ஆந்திரப்பிரதேசத்தில் 3251 பேருக்கு பாதிப்பு; 59 பேர் பலி; 2125 பேர் குணமடைந்தது.அருணாச்சலப்பிரதேசத்தில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.மத்தியப்பிரதேசத்தில் 7453 பேருக்கு பாதிப்பு; 321 பேர் பலி; 4050 பேர் குணமடைந்தது.இமாச்சலப்பிரதேசத்தில் 276 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 70 பேர் குணமடைந்தது.அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

மூலக்கதை