நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியுமா?; நீட்டிக்கப்படுமா?: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனை...!

தினகரன்  தினகரன்
நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியுமா?; நீட்டிக்கப்படுமா?: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனை...!

டெல்லி: நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை இது 4 முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 4வது ஊரடங்கு நீட்டிப்பு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதால், மே 31க்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா? அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா? கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன? அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான சூழ்நிலை  நிலவுகிறது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து, 4-வது கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஊரடங்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை  நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்த கருத்து குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் விவாதம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடியுடனான உள்துறை அமைச்சர் ஆலோசனை  முடிந்தப்பின், இன்று அல்லது நாளை ஊரடங்கு குறித்த முடிவுகள் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை