பொன் மகளை பாராட்டும் பொன் மனங்கள்; வெளுத்துக் கட்டும் வெண்பா!

FILMI STREET  FILMI STREET
பொன் மகளை பாராட்டும் பொன் மனங்கள்; வெளுத்துக் கட்டும் வெண்பா!

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்தில் வழக்கறிஞர் வெண்பா வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படம் நாளை அமேசான் (ஓடிடி)யில் வெளியாகவுள்ளதால் இதன் புரோமோசன் மற்றும் விளம்பரங்கள் இணையத்தை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.

பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாலும் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பை மீறி சூர்யா இந்த படத்தை ஆன்லைனில் வெளியிடவிருப்பதால் படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்களை எகிற வைத்துள்ளது எனலாம்.

இவையில்லாமல் பிரபலங்கள் பாரதிராஜா, தனஞ்செயன், எஸ்ஆர் பிரபு, அட்லி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதை சுருக்கம்..

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.

ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

அவரது மகள் வெண்பா (ஜோதிகா) ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார்.

மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது.

பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.

200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.

Celebrities praises Ponmagal Vandhal Jyothika as Lawyer Venba

மூலக்கதை