ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

தினமலர்  தினமலர்
ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலருக்கும் அந்தப்படம் நல்ல அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக் நடித்தவர் தான் ஸ்ரீசுதா ரெட்டி. அந்த ஒரே படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தின் ஒளிப்பதிவாளரான ஷ்யாம் கே.நாயுடு என்பவர் மீது தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த சமயத்தில் தொடர்ந்து தன்னுடன் நெருக்கமாக பழகும்படி வற்புறுத்தியதாகவும், தன்னை திருமணம் செய்கிறேன் என உறுதி கூறியதாகவும், தனக்கு பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்வதாகவும் கூறினாராம். ஆனால் சொன்னபடி செய்யாமல் பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஸ்ரீசுதா ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஷ்யாம் கே.நாயுடு மீது புகாரும் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் ஷ்யாம் கே.நாயுடுவை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனராம்.

மூலக்கதை