கேரளாவில் ஆன்லைன் டோக்கனில் சரக்கு வாங்கி சென்ற மது பிரியர்கள்

தினகரன்  தினகரன்
கேரளாவில் ஆன்லைன் டோக்கனில் சரக்கு வாங்கி சென்ற மது பிரியர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் லாக்-டவுன் அமலுக்கு வந்ததையடுத்து அரசு மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இந்த  நிலையில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு  கள்ளுக்கடைகள்   திறக்கப்பட்டன. தொடர்ந்து செல்போன்  செயலி (ஆப்) மூலம்  டோக்கன் கொடுத்து மது விற்பனை செய்ய  முடிவு செய்யப்பட்டது.  இதற்காக   கொச்சியில் உள்ள ஸ்டார்ட் அப்  நிறுவனத்தின் உதவியுடன் ‘பெவ் கியூ’ என்ற   பெயரில் செயலி  உருவாக்கப்பட்டது. இதில் பதிவு செய்து இ- டோக்கண் பெற்று வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது. மதுக்கடைகள் நேற்று காலை 9 மணிக்கு  திறக்கப்பட்டது.  டோக்கனில் உள்ள கியூஆர் கோடை பரிசோதித்த பின்னரே மது  வழங்கப்பட்டது. டோக்கன் இல்லாதவர்களுக்கு மது  கொடுக்கப்படவில்லை.

மூலக்கதை