பறவைகளை திறந்து விடுங்கள்: ஷரத்தா கபூர் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
பறவைகளை திறந்து விடுங்கள்: ஷரத்தா கபூர் வேண்டுகோள்

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், பல மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார். அவர் தனது சமூகவலைதளத்தில், கொரோனா ஊரடங்கில் அனைவரும் கூண்டில் அடைபட்டுக் கிடப்பதை போன்று உணர்கிறோம். இதே மாதிரிதான் உங்கள் வீட்டு கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் பறவை வாழ்நாள் முழுக்க இந்த துன்பத்தை அனுபவிக்கின்றன.

விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் நம்மைப் போன்ற உணர்வுகள் உள்ளன. அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலிருந்தும், அன்பானவர்களிடமிருந்தும் பிரிக்கும்போது அவை மனச்சோர்வடைகின்றன. அவற்றின் சுதந்திரத்தை பறிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவற்றை திறந்து பறக்க விடுங்கள். இவ்வாறு ஷரத்தா கபூர் எழுதியிருக்கிறார்.

மூலக்கதை