'அப்டேட்' கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம்

தினமலர்  தினமலர்
அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம்

'கேள்வி கேக்கறது ஈஸி, பதில் சொல்றதுதான் கஷ்டம்' இதெல்லாம் முன்னாடி சொல்லப்பட்ட வசனங்கள். ஆனால், இப்போது 'அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறதுதான் கஷ்டம்' என்பதுதான் புதிய வசனம்.

முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் 'அப்டேட் கொடுங்க, அப்டேட் கொடுங்க' என நச்சரிப்பார்கள்.

'மாஸ்டர், வலிமை, சூரரைப் போற்று, மாநாடு, டாக்டர்ஸ், ஜெகமே தந்திரம்' என பல படங்களின் அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று தாங்கள் தயாரிக்கும் படங்களில் ஒன்றான 'டிக்கிலோனோ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது அப்படத்தைத் தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அது குறித்து அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டபோது ஒரு ரசிகர் 'டாக்டர் அப்டேட் தாடா' என 'அன்பாகக்' கேட்டிருந்தார். இந்நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர், அயலான்' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.

அதிலுக்கு அவர்கள், “அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறதுதான் கஷ்டம். தயாரிப்பும், இறுதிக்கட்டப் பணிகளையும் மேற்கொள்ள லாக்டவுன் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறோம். லாக்டவுன் முடிஞ்சதும் 'டாக்டர், அயலான்' அப்டேட் அள்ளும் பாருங்க,” என கோபிக்காமல் பதிலளித்துள்ளார்கள்.

மூலக்கதை