ஐ.பி.எல்., தொடருக்கு அதிர்ஷ்டம்: என்ன சொல்கிறார் கம்மின்ஸ் | மே 27, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடருக்கு அதிர்ஷ்டம்: என்ன சொல்கிறார் கம்மின்ஸ் | மே 27, 2020

சிட்னி: ‘‘உலக கோப்பை (‘டுவென்டி–20’) ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடரை நடத்துவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும்,’’ என, பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில், வரும் அக். 18 முதல் நவ. 15 வரை ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. ஆனால் ‘கொரோனா’ காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகமாக உள்ளது. ஒருவேளை இத்தொடரை தள்ளிவைத்தால், ஏற்கனவே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த 13வது ஐ.பி.எல்., சீசன் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் கூறியது: ஒருவேளை ‘டுவென்டி–20’ உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டால், இக்கால கட்டத்தில் ஐ.பி.எல்., தொடரை நடத்துவது சிறந்த முடிவாக இருக்கும். ஏனெனில் இத்தொடருக்கு உலகெங்கிலும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் நடக்க இருப்பதால் இத்தொடருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். இத்தொடரை நடத்த விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதில், இது சிறந்த தொடர் என்பது முக்கியமானது. நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியதால், மீண்டும் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

மூலக்கதை