பவுலர்களுக்கு கடினம்: பிரட் லீ கணிப்பு | மே 27, 2020

தினமலர்  தினமலர்
பவுலர்களுக்கு கடினம்: பிரட் லீ கணிப்பு | மே 27, 2020

மெல்போர்ன்: ‘‘ஊரடங்கிற்கு பின், போட்டியில் பங்கேற்க இருப்பது பவுலர்களுக்கு கடினமானது,’’ என, பிரட் லீ தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் கிரிக்கெட் நட்சத்திரங்கள் வீட்டில் முடங்கினர். மீண்டும் போட்டிகளை நடத்துவது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆலோசித்து வருகிறது. இதற்காக சில வழிகாட்டுதல்களை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி பவுலர்கள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக 8 முதல் 12 வாரங்களும், ஒருநாள் போட்டிக்கு 6, ‘டுவென்டி–20’ போட்டிக்கு 5 முதல் 6 வாரங்களும் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ கூறுகையில், ‘‘மீண்டும் போட்டியில் பங்கேற்பது பவுலர்களுக்கு சிரமமாக இருக்கும். ஏனெனில் நீண்ட நாட்களாக வீட்டில் உள்ள இவர்கள், பழைய ‘பார்மை’ பெறுவதற்கு 6 முதல் 8 வாரங்கள் தேவைப்படும். டெஸ்ட், ஒருநாள் என, எவ்வகை  போட்டியாக இருந்தாலும் பவுலர்கள் முழு உடற்தகுதி பெறுவதற்கு 8 வாரங்களாகும். எனவே விரைவில் போட்டி துவங்கும் பட்சத்தில் பவுலர்களுக்கு நிறைய சவால் காத்திருக்கிறது,’’ என்றார்.

மூலக்கதை