சவுதியில் சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
சவுதியில் சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு

ரியாத் : கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் காலாவதியான சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு சவுதி அரசு நீட்டித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு பொது சேவைகளும் முடக்கப்பட்டது. சவுதி உட்பட பல நாடுகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்பு காரணமாக பலநாடுகளும் தங்களது மாநில மற்றும் பிற எல்லைகளையும் மூடியது. வேலை மட்டுமின்றி, மற்ற பிற காரணங்களுக்காகவும் சுற்றுலா விசாவை பயன்படுத்துவர். சவுதியிலும் மார்ச் முதல் விமான நிலையம் மூடப்பட்டது.


இதனால் சுற்றுலா விசாவில் சவூதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காலவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம். சவுதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கான காலக்கெடு கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது. பிப்.,24 முதல் மே.,24 வரையான காலங்களில், சவுதியில் 3 மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது. நாட்டில் கொரோனாவால் 76,726 பேர் பாதிக்கப்பட்டனர். 411 பேர் பலியாகினர். நோய் தொற்றில் இருந்து 48,450 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை