மொபைல் போன்கள் ஏற்றுமதி 14.6 சதவீதம் குறையும்: கார்ட்னர் நிறுவனம் தகவல்

தினமலர்  தினமலர்
மொபைல் போன்கள் ஏற்றுமதி 14.6 சதவீதம் குறையும்: கார்ட்னர் நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக மொபைல் போன்கள் ஏற்றுமதி பாதிக்கும் என கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக நாடுகளை கதிகலங்கச் செய்து வரும் கொரோனாவால் உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிறுவனமான கார்ட்னர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,' கொரோனா பரவலால் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களின் வருமானம் குறைந்து போனதால் பெரும்பாலானோர் மொபைல் போன்கள் வாங்குவதை தவிர்க்க நினைக்கிறார்கள். இதனால் உலக நாடுகளுக்கு இடையே மொபைல் போன் ஏற்றுமதி 14.6 சதவீதம் வரை குறையும்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பாண்டில் 5ஜி போன்கள் அறிமுகமாகும் என்றிருந்த நிலையில், மொபைல் போன்கள் ஏற்றுமதி குறையும் என்ற தகவலால் மொபைல் போன் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

மூலக்கதை