சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினமலர்  தினமலர்
சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா பாதிப்பு

சிங்கப்பூர் : கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 533 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிங்கப்பூரையும், மற்றவர்கள் பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மூலக்கதை