தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 509 பேர் பாதிப்பு என தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 509 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 509 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேருக்கும்,கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும், தெலுங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 6 பேருக்கும், உத்திரப்பிரதேசத்தில் 2 பேருக்கும், டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துபாயில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை