பேய் படங்களில் வருவதுபோல காற்றில் மிதக்கும் பேஷன் ஆடைகள்

தினமலர்  தினமலர்
பேய் படங்களில் வருவதுபோல காற்றில் மிதக்கும் பேஷன் ஆடைகள்

காங்கோ: மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ கிங்டமின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனீபா முவெம்பா. இவர் சமீபத்தில் வெர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பேஷன் உடைகள் கேட்வாக் செய்ய ஓர் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆனீபா என்ற பிரபல பேஷன் பிராண்டின் விளம்பரத்துக்காக அனீஃபா இந்த வகை கேட்வாக்கை உருவாக்கி உள்ளார். பொதுவாக கேட்வாக்கின்போது ரேம்பில் மாடல்கல் பலவித பேஷன் உடைகளை அணிந்து நடந்து செல்வர். தற்போது வெர்சுவல் ரியாலிட்டி மூலமாக மாடல்கள் இல்லாமல் உடைகளின் வடிவங்கள் மட்டும் இருட்டில் காற்றில் மிதந்து பார்வையாளர்களை நோக்கி நடந்து வருவதுபோல காட்சிப்படுத்தப்படும். இவை பேஷன் உடைகள் போலவே அச்சு அசலாக இருக்கும்.

இதுகுறித்துப் பேசிய அனீபா, எதிர்காலத்தில் பேஷன் கேட்வாக்குகள் இதுபோலவே நடைபெறும் என்றார். ஆனால் இது ஏதோ பேய் படங்களில் வருவதுபோல உடைகள் மட்டும் தானாக நடப்பதால் சில பயந்து வருகின்றனர். ஆனால் அனீபாவின் இந்த வித்யாசமான முயற்சிக்கு வரவேற்பும் இருக்கவே செய்கிறது.

மூலக்கதை