பதிவு செய்வதில் சிக்கல்: மாறுகிறது எலான் மஸ்க் மகன் பெயர்

தினமலர்  தினமலர்
பதிவு செய்வதில் சிக்கல்: மாறுகிறது எலான் மஸ்க் மகன் பெயர்

வாஷிங்டன்: டெஸ்லா எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தன் மனைவி கிரீம்ஸுக்கும் தனக்கும் பிறந்த மகனுக்கு X Æ A-12 என பெயர் சூட்டி இருந்தார். கணித சூத்திரம் போல இருக்கும் இந்த பெயர் சமூக வலைதலங்களில் முன்னதாக வைரலாகியது. ஆங்கில எழுத்துகள் இல்லாத காரணத்தால் இந்தப் பெயரை பதிவு செய்வதில் பெரிய சிக்கல் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் பெயரில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பெயருக்கான காரணத்தை கிரீம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கி இருந்தார்.


எக்ஸ் என்பது அன்னோன் வேரியபிளை குறிக்கும். Æ என்பது செயற்கைத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும். A-12 என்பது மஸ்க் தம்பதியருக்குப் பிடித்த போர் விமானத்தின் பெயர். தற்போது தங்கள் மகனில் பெயர் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்வதற்கு வசதியாக X Æ A-Xii என மாற்றப்பட்டுள்ளது. பெயரின் கடைசியில் இரண்டு 'i' சேர்க்கப்பட்டுள்ளதால் தற்போது இந்தப் பெயரை பதிவு செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. இதனை கிரீம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவிக்க, ரசிகர்கள் குஷியாகினர்.

மூலக்கதை