சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,065-ஆக உயர்வு: மாநகராட்சி

தினகரன்  தினகரன்
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,065ஆக உயர்வு: மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,065 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,488 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,253 பேருக்கும், தேனாம்பேட்டை 1188 பேருக்கும், தண்டையார்பேட்டை 1096 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை