அத்துமீறி ரோந்து பணியில் ஈடுபடும் சீன ராணுவம்; இந்தியா-சீன எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவத்தை குவிப்பதால் மீண்டும் போர்ப்பதற்றம்

தினகரன்  தினகரன்
அத்துமீறி ரோந்து பணியில் ஈடுபடும் சீன ராணுவம்; இந்தியாசீன எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவத்தை குவிப்பதால் மீண்டும் போர்ப்பதற்றம்

லடாக்: தொடர்ந்து இரு ராணுவமும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருவதால் இந்தியா-சீனா எல்லை பகுதிகள் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-சீனா எல்லை பகுதிகள் பெரும்பாலும் மலைப்பகுதியாகவுள்ளது. எனவே அங்கு  எல்லைகளை நிர்ணயிக்க வேலிகள் போன்றவை இல்லை. அதனை தவிர எல்லைகள் தனியாக இருக்கிறது. லைன் ஆப் அஸ் போல் கண்ட்ரோல் என்ற யார் கட்டுப்பாட்டில் எந்த பகுதி உள்ளது என்பது தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதனால், இப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, இதனைபோன்ற பிரச்சனைகள் நிகழ்கின்றன. இதற்கிடையே, பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய, சீன படைகள் இடையே கடந்த 2017-இல் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமார் 73 நாள்களுக்கு போர்ப்பதற்றம் நீடித்தது.  பின்னா், எல்லையில் அமைதியை பராமரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைவதாகவும், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ள பகுதியில் 2 கிலோ மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் முதல் உள்ளே  வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை தவிர சாலைகள் அமைக்க முயற்சிப்பது, கூடாரம் அமைக்க முயற்சிப்பதாகவும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதே வேலையில், அந்த  பகுதியில் இந்திய ராணுவம் சில பாலம் அமைக்க ஏற்பாடு செய்தபோது சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2017-ம் ஆண்டு நடைபெற்ற பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது போலவே இந்த முறையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமது பாதுகாப்பை விட்டுக்கொடுக்க  கூடாது என்பதற்காக அப்பகுதிக்கு கூடுதல் துருப்புகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது. மேலும், டிரேன் மூலம் அப்பகுதி இந்திய ராணுவத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன்  காரணமாக பேச்சுவார்ததை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை